• June
    25
    Tuesday

Main Area

Main



நான் நீண்ட நாள் காத்திருந்த ரஜினி படம் இது தான்: பிரபல கிரிக்கெட் வீரர் ட்வீட்!

rajini
rajini
Loading...

சென்னை: 'பேட்ட' அற்புதமான ரஜினி படம் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.அதில் நடிகர் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, நவாசுதீன் சித்திக்  உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். 80களில்  இருந்த ரஜினியை மீண்டும் திரையில் கண்ட அனுபவம், உண்மையிலேயே ரஜினி ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

dinesh

அந்த வகையில், பேட்ட திரைப்படத்திற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் பேட்ட குறித்து ட்வீட் செய்துள்ளார்.

 அதில், 'பேட்ட நான் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரஜினி படம். ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது சிரித்த முகத்துடன் வந்தால் அந்த படம் உங்களுக்கு எவ்வளவு பிடித்திருக்கும் என்பது தெரியும். இம்மாதிரியான அற்புதமான ரஜினி படத்தை எடுத்ததற்கு கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்துகள். சிறந்த பின்னணி இசை அனிருத். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் பாராட்டுக்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.

 

2018 TopTamilNews. All rights reserved.