• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

ஆண் காதலருடன் உல்லாசமாக இருக்க, மனைவியை கொன்ற கொடூரம்: அதிர்ச்சி தரும் உண்மை சம்பவம்!

crime

இங்கிலாந்து: ஆண் காதலருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, இளம் மனைவியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில், ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்துக் கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

jesika

இந்நிலையில் வீட்டில் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி பிணமாக கிடந்தார் ஜெசிகா. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கணவர்தான் ஜெசிகாவை கொன்றது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

ஆனால் தனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார் மிடேஷ் படேல். இதையடுத்து வீட்டில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி கேமரா உதவியுடன் நடத்திய விசாரணையில் ஜெசிகாவை அவர் கொன்றது உறுதியானது.

இதைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 'மிடேஷ் படேல் ஓரினச்சேர்க்கையாளராக இருந்துள்ளார். சமூகவலைத்தளத்தின் மூலம் அவருக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியரான, டாக்டர் அமித் படேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனால் மனைவி ஜெசிகாவை கொல்ல முடிவு செய்தார் மிடேல். அவரை கொன்றுவிட்டு கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஆஸ்திரேலியா சென்று வாழ முடிவு செய்தார். இத்தகவலை அமித் படேலுக்கும் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று ஜெசிகாவின் கையை டேப் மூலம் கட்டினார். பின்னர் அதிகப்படியான இன்சுலினை ஊசி மூலம் செலுத்தினார். பின்னர் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி, கழுத்தை அழுத்திக் கொன்றுள்ளார். இதனால் ஜெசிகா இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆதாரங்களை போலீசார், நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.இந்த வழக்கில் நீதிமன்றம் மிடேஷ் படேல் குற்றவாளி என்று நேற்று தீர்ப்புக் கூறியது. தண்டனை விவரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

             
2018 TopTamilNews. All rights reserved.