• May
    23
    Thursday

Main Area

Main



சுறாக்கள் மத்தியில் புகைப்படம்; ஆபத்தை விலை கொடுத்து வாங்கிய மாடல் அழகி!

shark
shark
Loading...

கலிபோர்னியா: சுறாக்கள் மத்தியில் புகைப்படம் எடுக்க முயன்ற மாடல் அழகியின் கையை சுறா ஒன்று கடித்து குதறியது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கத்ரினா எலி ஜரதுஸ்கி என்ற மாடல் அழகி தானாக சென்று ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறார். எச்சரிக்கைப் பலகையைப் பொருட்படுத்தாமல் பஹாமா பகுதி கடலுக்குள் சென்ற அவர் சுறா மீன்கள் மத்தியில் நீச்சல் அடிப்பது போன்று புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சுறா மீன் ஒன்று அவரது கையைக் கடித்துக் குதறியது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கத்ரினா சுறாவிடமிருந்து விடுபட்டு கையிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட வேகமாக நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார். ரத்த வாடை உணர்ந்து மற்ற சுறாக்கள் அவரை வேட்டையாடும் முன்பு அங்கிருந்து தப்பி பிழைத்த கத்ரினா உடனடியாக மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சுறா அவரது கையை கடித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நெட்டிசன்கள் அவருக்கு அறிவுரைகளையும், ஆறுதலையும் கூறி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.