• July
    21
    Sunday

Main Area

Main



மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் புதிய வீரர்; உற்சாகத்தில் ரசிகர்கள் !!

ஹெண்ட்ரிக்ஸ்
ஹெண்ட்ரிக்ஸ்
Loading...

மும்பை:  காயம் காரணமாக விலகிய அலஜாரி ஜோசப்பிற்கு பதிலாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஹெண்ட்ரிக்ஸ் என்னும் வேகப்பந்து வீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 


நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மூலம் ஐ.பி.எல் அரங்கில் கால் பதித்த அல்ஜாரி ஜோசப் தனது அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 12 வருட கால சாதனையை முறியடித்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் பெற்றார். 

 Alzarri Joseph

மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர் தான் முக்கிய வீரர் என்று ரசிகர்கள் கருதிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காயமடைந்த அல்ஜாரி ஜோசப் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முழுமையாக விலகினார். 

Beuran Hendricks

இவர் விலகியது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், அவரது இடத்தில் அவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஹெண்ட்ரிக்ஸ் என்னும் இடது கை வேகப்பந்து வீச்ச்சாளருடன் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ஒப்பந்தம் செய்துள்ளது. ஹெண்ட்ரிக்ஸ் அடுத்த சில தினங்களில் இந்தியா வந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: ரன் ஓடாததற்கு இது தான் காரணம்; தோனி ஓபன் டாக் !!

2018 TopTamilNews. All rights reserved.