• June
    25
    Tuesday

Main Area

Main



திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

jactogeo
jactogeo
Loading...

சென்னை: திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பினரின் போராட்டங்களை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தின் யோசனையைக் கேட்டு போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியையும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நீதிமன்றத்தில் அளித்திருந்தனர்.

இந்நிலையில், திட்டமிட்டபடி ஜனவரி 22-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியையும் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்றது ஜாக்டோ ஜியோ.

2018 TopTamilNews. All rights reserved.