• April
    25
    Thursday

Main Area

Main



ஜெயலலிதா செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை: ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

jayalalithaa
jayalalithaa
Loading...

சென்னை: ஜெயலலிதா நினைவு நாளையொட்டி சிறப்பு தொடர், செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதித்து ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதனையடுத்து விசாரணையை தொடங்கிய ஆணையம், பல்வேறு நபர்களுக்கு சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா நினைவு நாளையொட்டி சிறப்பு தொடர், செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதித்து ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை கருத்துக்கள், செய்திகளை வெளியிட கூடாது என குறிப்பிட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையம், முன் அனுமதியின்றி ஜெயலலிதா குறித்த செய்திகள் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.