• May
    26
    Sunday

Main Area

Main



இந்த ரணகளத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குது, இல்ல?

விஜய் மால்யா
விஜய் மால்யா
Loading...

இந்தியாவின் மிகப்பெரிய  பணக்காரர்களில் ஒருவராக இருந்து, ஒவ்வொரு புது வருடத்தையும் புதுப்புது வண்ண வண்ண காலண்டர்கள் மூலம் வரவேற்ற விஜய் மால்யாவை யாருக்குத்தான் தெரியாது. அவரின் முன்னோர் பாரம்பரியமாக  சம்பாதித்தது, பின் அவர் சம்பாதிதது என மொத்தததையும் அழிக்க வந்த ஒற்றை வெள்ளை யானை விஜய் மால்யாவின் கிங் ஃபிஷர் விமான போக்குவரத்து நிறுவனம்.  இந்தியாவின் முன்னணி பணக்காரர் என்ற நிலையில் இருந்து இந்தியாவின் முன்னணி வங்கி மோசடிக்காரர் என்ற நிலைக்கு ஆளாக காரணமே விமான நிறுவனம் ஆரம்பித்ததுதான்.

vijaya mallaya

கிங்ஃபிஷர் மட்டுமல்ல, நம்ம கலாநிதி மாறன்கூட, தொலைகாட்சி தொடர்கள்மூலம் பல தாய்மார்களை அழவிட்டு சம்பாதித்த பணத்தை, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை வாங்கியதன்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தார். நிலைமை கைமீறி செல்வதற்கு முன்பாக, ஆள விட்றான் சாமி போதும் விமான தொழில் என்று நடையை கட்டினார். மிகச்சமீபமாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமானங்களை இயக்கத் தேவையான பணம் இல்லாததால் தன்னுடைய மொத்த விமான போக்குவரத்தையும் நிறுத்திவிட்டது.

air india

இவ்வளவு ரணகளம் நடந்துகொண்டு இருக்கிறது தனியார் விமான நிறுவனங்களில். தனியார் நிறுவனங்களின் டப்பாவே டான்ஸ் ஆடுகிறது என்றால், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் நிலைமை என்ன ரேஞ்சில் இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், பிரச்னை எல்லாம் ஏதோ ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் நடக்கிறது, எனக்கென்ன பிரச்னை என்ற கணக்கில் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் கமாண்டர் பொறுப்பில் இருக்கும் ஒருவரின் நடவடிக்கை, ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் நிறுவனத்திற்கு மேலும் சிக்கலை கொண்டு வந்திருக்கிறது. 

women harrassment

தன்னிடம் பயிற்சி பெற்று வரும் பெண் விமானி ஒருவரை இரவு டின்னர் சாப்பிட ஹோட்டலுக்கு அழைத்திருக்கிறார் அந்த கமாண்டர். தொழில் சொல்லி கொடுக்கும் குரு என்பதால் மட்டுமல்லாமல், இதுவரை கண்ணியமாக நடந்து வந்துள்ளார் என்ற நம்பிக்கையில் இந்த பைலட்டும் அங்கு செல்ல, அங்கே அந்த கமாண்டருக்கு குதிரை கணைக்க ஆரம்பித்திருக்கிறது. ஆபாசமாக பேச ஆரம்பித்த கமாண்டருக்கு எச்சரிக்கை விடுத்து உடனடியாக அவ்விடத்தை காலி செய்துவிட்டு, முதல் வேலையாக நிறுவனத்திடம் இதனை முறையான வழியில் புகாராகவும் பதிவு செய்திருக்கிறார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தன் நடவடிக்கைகளை நிறுத்தியவுடன், சம்பள பாக்கிக்காகவும், திரும்பவும் நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும்கோரி அந்நிறுவன ஊழியர்கள் ஊர்வலம், உண்ணாவிரதம் என போர்க்கொடி தூக்கி அலைகின்றனர். அதேபோல் வாழ்வாதாரமே கேள்விக்குரியாகி நிற்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் கமாண்டர், இந்த ரணகளம் பற்றி துளியும் கவலை இல்லாதவராக, கிளுகிளுப்புக்கு ஏங்கி போயிருக்கிறார். வெளங்கிரும் ஏர் இந்தியா.

2018 TopTamilNews. All rights reserved.