• July
    17
    Wednesday

Main Area

Main



ஜே.கே. ரித்திஷ் மரணம்; திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

ஜே.கே. ரித்திஷ்
ஜே.கே. ரித்திஷ்
Loading...

முன்னாள் எம்பியும் நடிருமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜே.கே. ரித்திஷ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

stalin

இதுகுறித்து அவர், ராமநாதபுரம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், எனது நண்பருமான திரு ஜே.கே.ரித்திஷ் இளம் வயதில் திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களிடமும், என்னிடமும் அளப்பரிய அன்பு காட்டிய திரு ஜே.கே. ரித்திஷ் அவர்கள் கழகத்தில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர். ராமநாதபுரம் தொகுதி மக்களின் பிரச்னைகளை ஆணித்தரமாக நாடாளுமன்றத்தில் வாதிட்டவர். 

நாளடைவில் வேறு இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டாலும், தனது பழைய நட்பை மறந்து விடாமல் தொடர்ந்து பாசத்துடன் பழகியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2018 TopTamilNews. All rights reserved.