• June
    27
    Thursday

Main Area

Main



கர்ப்பமாக இருப்பதை உலகிற்கு வெளிப்படையாக காட்டிய எமி ஜாக்சன்: வைரல் வீடியோ!

எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்
Loading...

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ள நிலையில் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர்  லண்டன் நடிகையான எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது. இவர் என்ன தான் வெளிநாட்டு இறக்குமதி என்றாலும் தமிழ் படங்களில் கலாச்சார  வரம்பை மீறாதவர் என்றே சொல்லலாம். ஆனால்  பாலிவுட்டில் ஏகத்துக்கும் கவர்ச்சியை அள்ளி  வீசியவர் எமி.

amy

இதையடுத்து எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே,  கர்ப்பமாக இருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். எமியின் இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பூகம்பத்தைக் கிளப்பியது. என்ன தான் தமிழ் படங்களில் நடிச்சாலும் அது வெள்ளைகாரிலப்பா அதனால் அப்படி தான் இருக்கும் என்று பலர் தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறிக் கொண்டார்கள். இருப்பினும் ஒரு தாயின் மனப்பக்குவத்தை எமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். 

amy

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் முதன்முறையாகக் கர்ப்பம் குறித்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘இன்றுடன் 22 வாரம் ஆகிறது. இதுவரை என் கர்ப்பம் பற்றி நான் ஏதும் பேசவில்லை. தற்போது பேசலாம் என்று நினைக்கிறேன். இனி என்  கர்ப்பகாலம் குறித்த வீடியோக்களை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

amy

எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் இது போன்று வீடியோ வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் சிலகாலத்திற்கு படங்களில் தலைகாட்டாததால் இது போன்று வீடியோக்கள் மூலம் ரசிகர்களின்  கவனத்தை தொடர்ந்து தக்க வைத்து கொள்கிறாரோ என்று நெட்டிசன்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.  

எமி ஜாக்சன் வீடியோ 

2018 TopTamilNews. All rights reserved.