உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்- கமல்ஹாசன்

 

உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்- கமல்ஹாசன்

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு படை வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். உயிரிழந்த அந்த 2 படை வீரர்களுள் ஒருவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலால் லடாக்கில் தற்போது நிலவி வரும் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் வீரமரணத்துக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரி பதிவிட்டுள்ள அவர், “எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.