• May
    26
    Sunday

Main Area

Main



'காஞ்சனா 3' நடிகை பாலியல் புகார்: கோலிவுட்டில் பரபரப்பு!

 காஞ்சனா 3
காஞ்சனா 3
Loading...

சென்னை: காஞ்சனா 3 படத்தின் நாயகி நடிகர்  ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்ய நடிகை ரி ஜாவி அலெக்ஸாண்டர்  கடந்த 10 ஆண்டுகளாக கணவர் மற்றும் குழந்தையுடன் எம்.ஆர்.சி.நகரில் வசித்து வருகிறார். விளம்பர படங்களில் நடித்து  வரும் இவர் ‘காஞ்சனா-3’ படத்தில் நடிகர் லாரன்சுடன் இணைந்து நடித்துள்ளார். 

kanchana

 

இந்நிலையில்  சென்னை காவல் ஆணையர்  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நடிகர் ரூபேஷ் குமார் என்பவர் விளம்பர படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி என்னை புகைப்படம் எடுத்தார். பின்னர் அதை மார்பிங் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பி தன்  விருப்பப்படி நடந்துகொள் இல்லாவிட்டால் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார். ஒருகட்டத்தில் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.  

kanchana

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம்  நடிகர் ரூபேஷ்குமாரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் வாசிக்க: ’அஜீத் மட்டும் தான் இந்திக்குப் போவாரா?’...ஷாருக் கானை ‘தளபதி 63’க்குள் விஜய் இழுத்த ரகசியம்...

2018 TopTamilNews. All rights reserved.