2ஜி வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படுவதால் கவலையில்லை: கனிமொழி!

 

2ஜி வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படுவதால் கவலையில்லை: கனிமொழி!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முதல் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்காயம் அறிவித்தது. இதை ஊழல் என்று ஊடகங்கள் எழுதின.

2ஜி வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படுவதால் கவலையில்லை: கனிமொழி!

இதைத் தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்று கூறி 17 பேரையும் விடுதலை செய்து வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் நீதிபதி ஓய்வு பெறுவதால் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2ஜி வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படுவதால் கவலையில்லை: கனிமொழி!

இந்த நிலையில் பீமா கோரேகான் வன்முறை வழக்கில் சமூக ஆர்வலரும் பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி, “ஸ்டான் சுவாமி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட கூடிய சூழலில்தான் நாட்கள் சென்று கொண்டு இருக்கின்றன. அனைத்தையும் தனக்கு சாதமாக மாற்றும் ஓர் ஆட்சி தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. அனைத்து துறைகளையும் தனது குரலாக மாற்றி வருகிறார்கள். எந்த திசையில் திரும்பினாலும் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. மத்திய அரசு தான் நினைத்ததை எப்படியாவது சாதிப்பதில் தெளிவாக இருக்கிறது. விவசாயிகள் நாடு முழுவதும் நடத்தும் போராட்டத்தை திசை திருப்பினார்கள். இதே நிலை நீடித்தால் நாளை அடிப்படை உரிமைகள் இன்றி அடுத்த தலைமுறை வாழும். அனைவரும் போராடியே ஆக வேண்டும் என்ற காலகட்டத்தில் இருக்கிறோம். போராடி நாட்டை மீட்டெடுப்போம். மத்திய அரசுக்கு எதிராக இந்தியாவிலேயே முதல் குரலாக திமுக எழுப்புவதால், என்னுடைய வழக்கை ( 2ஜி வழக்கை ) விரைவாக விசாரிக்கிறார்கள். அது குறித்து எனக்கு கவலையில்லை” எனக் கூறினார்.