• April
    25
    Thursday

Main Area

Main



ஆர்.ஜே.பாலாஜி படத்துக்கு வாழ்த்து தெரிவித்த கபில் தேவ்!

kapil dev and rj balaji
kapil dev and rj balaji
Loading...

சென்னை: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து இம்மாதம் வெளியாக இருக்கும் LKG திரைப்படத்திற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘எல்.கே.ஜி. பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார். ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அரசியலுக்கு வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி' என்று இப்படத்தின் விளம்பரம் தொடங்கப்பட்டது. மேலும், படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் என அனைத்துமே சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைக் கிண்டல் செய்யும் விதத்தில் இருந்ததால் பல எதிர்பார்ப்பு  எழுந்துள்ளன.

இந்நிலையில் LKG திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நேற்று ட்விட்டர் இந்தியா வெளியிட்டது. அதைத்தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கபில் தேவ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் அதில்  ''வணக்கம், நான் கபில் தேவ். ஆர்ஜே பாலாஜிக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் விளையாடுவது மிக எளிது.

ஆனால், திரைப்படங்களில் வேலை செய்வது மிகக் கடினம். இதை ஒரு கிரிக்கெட் வீரனாக நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு. உங்களுக்கு என் வாழ்த்துகள். பெரிய நாயகனாக வளருங்கள். உங்கள் திரைப்படம் எல்.கே.ஜி வெற்றி பெற என் வாழ்த்துகள்'' என்று அதில் கூறியுள்ளார்.
 

2018 TopTamilNews. All rights reserved.