• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

பேசி தீர்த்துக்கலாம்; மேகதாது தொடர்பாக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்

sivakumar

பெங்களூரு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசி தீர்த்து கொள்ளலாம் என முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மேகதாது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.மேலும் திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர்,  மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசும் தமிழக மக்களும் நினைப்பது வேறு, ஆனால் உண்மை நிலை வேறு. மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம். சுமுகமாக பேசி தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புகிறது என கூறியுள்ளார்.

             
2018 TopTamilNews. All rights reserved.