• February
    18
    Monday

Main Area

Main

தில்லுக்கு துட்டு 2 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கயல் சந்திரன்

kayal chandran and ram bala
kayal chandran and ram bala
Loading...

சென்னை: நடிகர் கயல் சந்திரன் தில்லுக்கு துட்டு 2  படம் இயக்கிய ராம் பாலாவுடன் இணைந்து திரைப்படம் நடிக்கவுள்ளார்.

 பிரபு சாலமனின் இயக்கத்தில் கயல் திரைப்படத்தின் மூலம்  கதாநாயகனாக அறிமுகமானவர் சந்திரன். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தையடுத்து தனது பெயரை 'கயல்' சந்திரன் என மாற்றிக்கொண்டார். அதைத்தொடர்ந்து நான் செய்த குறும்பு மற்றும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

daavu

இந்நிலையில் நடிகர் கயல் சந்திரனை வைத்து தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் இயக்கிய ராம் பாலா "டாவு" என்ற புதிய படம் இயக்குள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக அஞ்சு குரியன் நடிக்கவுள்ளார். இந்த படம் ஹாரர் ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து கோடை விடுமுறைக்கு வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.