• October
    17
    Thursday

Main Area

Main



பெண் போலீஸை பெட்ரோல் ஊற்றி எரித்த ஆண் காவலர் மரணம்!

அஜாஸ் - சவுமியா
அஜாஸ் - சவுமியா

கேரளா:  பெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொலை செய்த வழக்கில் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆண் போலீஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

somya

கேரள மாநிலம் மாவேலிக்கரையில் உள்ள வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் சவுமியா. இவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்த நிலையில் அவரது  கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த 15 ஆம்  தேதி பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த சவுமியாவை அஜாஸ் என்பவர் காரில் பின்தொடர்ந்து வந்து தாக்கியதோடு,  சவுமியாவை  பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். அப்போது சவுமியா அஜாஸை  கட்டிப்பிடித்துள்ளார். இதில் அஜாஸுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் சவுமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதைக் கண்ட அப்பகுதிவாசிகள் அஜாஸை  பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த இளைஞருக்கு 50சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அதனால் அவரை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

police

இது குறித்து போலீசார் நடத்திய   விசாரணையில், அஜாஸ் ஆலுவா காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. சவுமியா கடந்த 4 வருடத்துக்கு முன் திருச்சூர் போலீஸ் அகாடமியில் பயிற்சிக்குச் சென்றபோது அங்குப் பயிற்சியாளராக இருந்துள்ளார்  அஜாஸ்.  அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அஜாஸிடம் சவுமியா  ஒன்றேகால் லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.  அந்தப் பணத்தை சவுமியா திருப்பிக் கொடுத்தபோது அதை வாங்காமல் தன்னைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார்.  அதைச் சவுமியா மறுத்து வந்தார் என்பது தெரியவந்துள்ளது. 

police

இந்நிலையில் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அஜாஸ்  சிகிச்சை பலனின்றி நேற்று மாலை  மரணமடைந்தார். முன்னதாக ஆலப்புழா நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த அஜாஸ், தன்னை திருமணம் செய்துகொள்ளாததால் சவுமியாவை கொலை செய்தேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.