• July
    19
    Friday

Main Area

Main



காதலை ஏற்க மறுத்த பெண் போலீஸை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: தாயார் கூறிய பகீர் தகவல்!

 அஜாஸ் -சவுமியா
அஜாஸ் -சவுமியா
Loading...

கேரளா:  பெண் காவலரை போக்குவரத்து காவலர் ஒருவர் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் மாவேலிக்கரையில் உள்ள வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் சவுமியா. இவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்த நிலையில் அவரது  கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பனி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த சவுமியாவை அஜாஸ் என்பவர் காரில் பின்தொடர்ந்து வந்து தாக்கியுள்ளார். பின் சவுமியாவை  பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். அப்போது சவுமியா அஜாஸை  கட்டிபிடித்துள்ளார். இதில் அஜாஸுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் சவுமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதை கண்ட அப்பகுதிவாசிகள் அஜாஸை  பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த இளைஞருக்கு 40சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அதனால் அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  

soumyaa

இது குறித்து போலீசார் நடத்திய   விசாரணையில், அவர் ஆலுவா காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலர் அஜாஸ் என்பது தெரியவந்தது. சவுமியா கடந்த 4 வருடத்துக்கு முன் திருச்சூர் போலீஸ் அகாடமியில் பயிற்சிக்குச் சென்றபோது அங்குப் பயிற்சியாளராக இருந்துள்ளார்  அஜாஸ்.  அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அஜாஸ்  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சவுமியாவிடம் கூறி வந்துள்ளார். அதைச் சவுமியா மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

police

இந்நிலையில் உயிரிழந்த சவுமியாவின் அம்மா இந்திரா அளித்துள்ள பேட்டியில், சவுமியாவுக்கு அஜாஸ் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். அதனால் அவர் அவரது நம்பரை பிளாக் செய்தார். பின் நம்பரையே மாற்றி விட்டார். இருப்பினும் வீட்டிற்குக் கூட வந்து தகராறு செய்ய ஆரம்பித்தார். இது குறித்து சவுமியா பலமுறை என்னிடமும், அவரது மகனிடமும் கூறியுள்ளார். ஒருமுறை இது குறித்து அவரது மேல் அதிகாரியிடம் கூறிய போது, அவர் புகார் கொடுக்க அறிவுறுத்தினார். ஆனால்  சவுமியா புகாரைக் கொடுக்கவில்லை' என்று கண்ணீர்  மல்கக் கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.