• May
    26
    Sunday

Main Area

Main



தொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு!

கொல்கத்தா அணி
கொல்கத்தா அணி
Loading...

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள  5 வீரர்களை ஓய்வெடுக்க கொல்கத்தா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி  இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி மற்றும் 6ல் தோல்வியடைந்துள்ளது. அதனால் தரவரிசை பட்டியலில் 6 வது  இடத்தில் உள்ளது. தொடக்கத்தில் அதிரடி காட்டி வந்த கொல்கத்தா கடந்த 5 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இதனால் அணியில் உள்ள சில வீரர்கள் ஓய்வெடுக்க கொல்கத்தா நிர்வாகம்  கூறியுள்ளது. 

kolkata

அந்த வகையில்  கொல்கத்தா  அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, நிகில் நாயக், ஸ்ரீகாந்த் முண்டே மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் ஓய்வு எடுக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக இதில் தினேஷ் கார்த்திக் மற்றும் ராபின் உத்தப்பா இந்த  தொடரில் அதிக ரன்கள் குவிக்கவில்லை.  தினேஷ் கார்த்திக் இதுவரை 117 ரன்களும், உத்தப்பா 220 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். 

rabin

அதுமட்டுமின்றி தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடும் ரஸலை 7வதாக களமிறக்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல் உத்தப்பா கடைசி நேரம் வரை பந்தை வீணடிப்பதால், அணியின் தோல்விக்கு அது பெரும் கரும்புள்ளியாக இருக்கிறது. அதன் காரணமாக அவரும் சில போட்டிகளில் ஓய்வெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

kolkata

தவறுகளை திருத்திக் கொள்ள தினேஷ் கார்த்திக் மற்றும்  உத்தப்பா கொல்கத்தா அணியின் ஆலோசகரான அபிஷேக் நாயருடன் நேரம் செலவிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: மீண்டும் ஒரு மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்; கொண்டாடும் ரசிகர்கள் !!

2018 TopTamilNews. All rights reserved.