• June
    20
    Thursday

Main Area

Main



நடிகை குஷ்பு மருத்துவ மனையில் திடீரென்று அனுமதி! சோகத்தில் ரசிகர்கள்!

குஷ்பு
குஷ்பு
Loading...

சென்னை: நடிகை குஷ்பு திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது' நாளை என்னைத் தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்க முடியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். என் கெட்ட நேரம். நாம் ஒன்று நினைத்தால் இயற்கை வேறொன்று நினைக்கிறது. மிகுந்த வருத்தமாயிருக்கிறது' என்று கூறியுள்ளார். 

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளால் குஷ்பு மிகவும் அப்செட் ஆனதால் ரத்த அழுத்தம் அதிகமாகி  நேற்று இரவு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நார்மல் கூடத்துக்கு வந்திருக்கிறார் தகவல் வெளியாகியுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.