• July
    21
    Sunday

Main Area

Main



அதிமுக விஞ்ஞானி தெர்மகோல் ராஜூ; கலாய் ட்வீட்டின் மூலம் பதிலடி தந்த குஷ்பூ

குஷ்பூ - செல்லூர் ராஜூ
குஷ்பூ - செல்லூர் ராஜூ
Loading...

மதுரை அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார் செல்லூர் ராஜூ. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரையில் எருமை குளித்தால் கூட கூட்டம் கூடும். அதனால் நடிகர்களுக்கு கூட்டம் கூடுவதில் ஆச்சரியமில்லை. நடிகர் வடிவேலுக்கு கூடாதா கூட்டமா, கூட்டங்கள் எல்லாம் ஓட்டாக மாறாது என தெரிவித்தார்.

dsdv

மேலும் அவர், குஷ்பூ இளமையாக இருந்தபோது அவருக்கு கோவில் கட்டினார்கள். ஆனால் அதே குஷ்பூ திமுகவுக்காக ஓட்டு கேட்டபோது யாரும் ஓட்டுப்போடவில்லை. தற்போது குஷ்பூவுக்கு வயதாகி விட்டது, அதனால் அவர் பிரசாரத்தை கேட்டெல்லாம் யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள் என்றார்.

செல்லூர் ராஜூவின் இந்த கருத்துக்கு குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து, நம்ம அதிமுக விஞ்ஞானி செல்லூர் ராஜூவுக்கு வயதாகி விட்டது நல்லா தெரியுது. பாவம் என்னமோ பேசிகிட்டு இருக்கார். அப்பறம், எனக்காக கூடும் மக்கள் கூட்டத்தை பார்த்து சொன்னதுக்கு சந்தோஷம். 30 ஆண்டுகளுக்கு பிறகும் என்னால் இத்தனை மக்களை கூட்ட முடிகிறது என்றால், அதற்கு தமிழக மக்களுக்கு நான் மனதார நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இதையும் வாசிங்க

மிரட்டும் எபோலா; காங்கோவில் 655 பேர் பலி!

2018 TopTamilNews. All rights reserved.