லைசன்ட் கில்லர்... அமைதியாக இருந்து உயிரைப் பறிக்கும் நோய்கள்!

 
SILENT KILLERS

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான உணவு, உடற்பயிற்சி, துடிப்பான வாழ்க்கை முறை, நல்ல தூக்கம் அவசியம். இவற்றை தவறவிடும் போது பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்படுகின்றன. திடீரென்று உடலை முடக்கி, உயிரைக் காவு வாங்கக் கூடிய சில நோய்களைப் பற்றிப் பார்ப்போம்...

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உயர் ரத்த அழுத்த பிரச்னை பலருக்கும் ஏற்படுவதைக் காண்கிறோம். வீட்டுக்கு ஒருவருக்காவது உயர் ரத்த அழுத்த பிரச்னை இருக்கும். உலகம் முழுக்க 128 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உயர் ரத்த அழுத்த ரத்த நாளங்களைப் பாதிக்கிறது. மேலும், மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் குறைவுக்குக் காரணமாகிவிடுகிறது.

உயர் ரத்த அழுத்த பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்க அவ்வப்போது உயர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து அது இயல்பு நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பு அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். புத்தகத்தைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வரும். சிகரெட், மது பழக்கங்களைத் தவிர்த்து உடற்பயிற்சியை செய்து வர வேண்டும்.

காலையில் நன்றாக பேசிக் கொண்டிருந்தார், திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போன ஏற்கனவே இறந்துட்டார்னு சொல்லிட்டாங்க... இப்படியான உரையாடலை நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இதய தசைக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு மாரடைப்பு என்று கூறுகிறோம். இதயத் திசுக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க, ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் செல்லாத போது அவை இறக்க ஆரம்பிக்கின்றன. உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும்.

மற்றொரு மிகப்பெரிய சைலண்ட் கில்லர் சர்க்கரை நோய். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பாதிக்கப்படுகின்றது. ஆரம்ப நிலையில் சோர்வு, மயக்கம், பசி, தாகம், உடல் எடைக் குறைப்பு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகளை இது ஏற்படுத்தும். ஒரு கட்டத்துக்குப் பிறகு இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, பார்வைத் திறன் இழப்பு, புண்கள் ஆறாமை என்று மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தி உயிரையே பறித்துவிடும்.

ஸ்லீப் ஆப்னியா எனப்படும் தூக்கம் தொடர்பான நோய் கூட உயிரைப் பறித்துவிடும். ஸ்லீப் ஆப்னியா பிரச்னை உள்ளவர்களுக்கு தூக்கத்தில் குறட்டை சத்தம் அதிகமாக வரும். தூக்கத்தின் போது குரல் பகுதி தசை தளர்ந்துவிடும். அப்போது உள் நாக்கு சுவாசப் பாதையில் தடையை ஏற்படுத்தி திடீர் உயிரிழப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்திவிடலாம்.

கல்லீரல் அழற்சி மிகப் பெரிய சைலன்ட் கில்லராக உருவெடுத்து வருகிறது. ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரலில் அழற்சி ஏற்படுவது ஒரு வகை. கொழுப்பு மிக்க உணவு சாப்பிடுவதால் ஏற்படும் கல்லீரல் அழற்சி மற்றொரு வகையாக உள்ளது. இந்த இரண்டு வகைகளும் தற்போது அதிகரித்துக்கொண்டுள்ளது. இதற்கு அதிக அளவில் மது அருந்துவது மற்றும் அதிக கார்போஹைட்ரேட், கொழுப்பு மிக்க, ஜங்க் உணவுகளைச் சாப்பிடுவது முக்கிய காரணமாக உள்ளது. கல்லீரல் அழற்சி முற்றிய நிலையில் உயிரிழப்பு ஏற்படும்.