நுரையீரலில் தேங்கிய நஞ்சுவை விரட்டும் அஞ்சு ரூபாய் அரைக்கீரையை இப்படி சாப்பிட்டா நோய்களை பஞ்சாக்கும்

அரைக்கீரையின் பயன்கள் :-
தூதுவாளைக்கு சம அளவு சத்துக்களை உடைய கீரை இந்த அரைக்கீரை.அரைக்கீரையை நீர்விட்டு அலசி நெய்விட்டு வதக்கி தினமும் காலை உண்டு வந்தால் ஆண்மை பெருகும்.உடல் பலம் அதிகரிக்கும்.
இயற்கையான உணவுகளை அதிகம் சாப்பிடும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் அதிகம் நோய் தாக்குதல்களுக்கு உள்ளவாதில்லை. இத்தகைய நோய்களிலிருந்து நம்மை காத்து கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும். அப்படி சத்து நிறைந்த உணவு வகைகளாக கீரை வகைகள் இருக்கின்றன. இதில் அரை கீரை பயன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.குடல் புண்கள் விரைவில் குணமாகும்.அரைக்கீரையில் உள்ள இரும்புசத்து நரம்பு தளர்ச்சியை சரிசெய்து நரம்புகளுக்கு பலத்தை அளிக்கிறது.
வயிற்று புண்கள் காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அரை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. கடுமையான மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது. ஜுரம், காய்ச்சல் ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். இந்த ஜுரம், காய்ச்சல் தீர்ந்ததும் உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.
இந்த அரைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து, உடல் வலுவை தரும்.தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த அரைக்கீரையை தொடர்ந்து உண்டு வராலாம்.நல்ல பலன் கிடைக்கும்.
பொதுவாக பத்திய சாப்பாடு உண்பவர்களுக்கு இந்த அரைக்கீரை மிகவும் சிறந்தது.நோயால் துவண்டு போன உடலை வலுப்படுத்தும் சக்தியும் இந்த அரைக்கீரைக்கு உண்டு.வாயு மற்றும் வாத நீர்களையும் சரிசெய்கிறது.
அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.இதயம் வலிமை பெறும்.குடல் சுத்தமாக இருக்கும்.சித்த மருத்துவதிலும் இந்த அரைக்கீரையின் பங்கு மிகவும் முக்கியதூவம் வாய்ந்தது.இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது.
இந்த கீரையை தொடர்ந்து , உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.நூரையீரல் நோய்கள் நீங்கும் .வாதம்,பித்தம்,கபம் போன்றவற்றை சரிசெய்யும்.நரம்புகளை வலுப்படுத்தும்...