அத்தி பழத்துக்குள் குழந்தையின் உடலுக்கு காத்திருக்கும் அதிசயம்

 
child eat

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி அத்திப்பழங்களுக்கு உண்டு.அத்தி இலைச் சாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துது. சிலவகை புற்று நோய்கள தடுக்குதுனு கூட கண்டுபிடிச்சிருக்காங்க. அப்புறம் என்னமாதிரி வயசானவா இருக்கா இல்லயா!, அவங்களுக்கு கண் சம்பந்தமான நோய்கள தடுக்குது; சிறந்த ஆன்டி ஆக்சிடென்டா (anti oxidant) செயல்படுதுஅத்தி பழத்தை காயவைத்து மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. அத்தி பழம் ஜாம் செய்தும், அத்திப்பழ டானிக் செய்தும் அருந்தலாம்.
அத்திபழத்தில் chlorogenic acid உள்ளதால் BP & DM கட்டுப்படுத்துகிறது
அத்தி பழமானது சாலட், கேக், ஐஸ்கிரீம், சான்ட்விச், ஸ்வீட், சூப் இவை தயாரிப்பதில் பயன்படுகிறது

Athipalam Nanmaigal, Athipalam Benefits, அத்திப்பழம் நன்மை தீமைகள்

சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன. அத்திப்பழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது.

பெண்கள் தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்துக் காலை எழுந்தவுடன் நீரைக் குடித்து பழத்தை மென்று சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும்.

கர்ப்பக் காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன், உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாகப் பெறமுடியும்.

சரிவரப் பசி எடுக்காத குழந்தைகளுக்கு அத்திப்பழம் நல்லது. இருமல் உள்ள குழந்தைகளுக்கும் அத்திப்பழம் கொடுக்கலாம். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது இது.

உயரழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.