கல்லீரலில் நச்சுத்தன்மையை நீக்கி நோயின்றி வாழ உதவும் இந்த செலவில்லாத உணவு வகை.

 
liver

பொதுவாக இரத்தத்தை சுத்தப்படுத்துவது உடலில் இருந்து நச்சுக்களை இயற்கையாக வெளியேற்றி, நோய்களைத் தடுப்பதற்கும் உதவுகிறது.இந்த ரத்தத்தை பல உணவுகள் மூலம் சுத்தப்படுத்தலாம் .உதாரணமாக நீர் இரத்தத்தின் PH அளவை பராமரிக்கவும், இரத்த திரவியத் தன்மையை பராமரிக்கவும் மற்றும் நச்சுகளை சிரமமின்றி வெளியேற்றவும் உதவுகிறது.இது போல ரத்தம் சுத்தம் செய்ய உதவும் உணவுகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம் 
1.பூண்டில் காணப்படும் அல்லிசின் என்பது கந்தகத்தைக் கொண்ட கலவை நச்சுப் பொருட்களிலிருந்து கல்லீரலைப் பாதுகாக்கும்.

2.அதோடு பூண்டில் உள்ள வலுவான ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இரத்தத்தை மட்டுமல்லாது குடல் பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்கள் இல்லாமல் வைத்திருக்கவும் உதவுகின்றன.

3.கொத்தமல்லி இலை இரத்த ஓட்டத்தில் சேரும் மற்ற கன உலோகங்களை அகற்ற உதவுகிறது.

4.கொத்தமல்லியில் உள்ள சல்பர் கலவை இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி வீக்கத்தைக் குறைக்கின்றன.
5.பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இரத்தத்தை சுத்தமாக்கவும் உதவுகிறது.
6.உணவில் அதிக பீட்ரூட்டை சேர்ப்பது கல்லீரலில் நச்சுத்தன்மையை நீக்கவும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
7.மஞ்சளில் உள்ள குர்குமின் நச்சு நீக்கும் பண்புகளை வெளிப்படுத்தும் கலவையைக் கொண்டுள்ளது.
8.மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சு நீக்கும் நொதிகளை உற்பத்தி செய்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

Advertisement

9.மிளகாயில் உள்ள கேப்சைசின் இரத்தத்தை சுத்திகரித்து உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.
இந்த கேப்சைசின் மிளகாய்க்கு காரத்தை கொடுக்கும் கலவை ஆகும். மேலும் இது சில புற்றுநோய்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
10.வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பது இரத்தத்தை சுத்தப்படுத்தவும் கல்லீரலை நச்சு நீக்கவும் உதவுகிறது.