குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

 
kudai

பொதுவாக குடை மிளகாய் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் உதாரணமாக 
குடைமிளகாய் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது மற்றும் உடலை சுறுசுறுப்பாக்குகிறது. குடைமிளகாய் வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும்.மேலும் இதுபோல் குடை மிளகாய் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து நாம் காணலாம் 
1.குடைமிளகாய் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்களின் வகைகளில் வருகிறது.
2.குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, சோடியம் குறைவாக இருப்பதால் உணவில் அடிக்கடி குடைமிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
3.குடைமிளகாயில் உள்ள “வைட்டமின் சி” கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
4.சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
5.இதனால் சர்க்கரை அளவு குறையும். இளமையில் கண் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்க குடைமிளகாய் உதவுகிறது.
6.குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது 
7.குடைமிளகாய் சைனஸ், சளி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
8.குடைமிளகாய் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 
9.மேலும் குடைமிளகாயில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. 
10.குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.