திராட்சை பழத்தின் தண்ணீருக்குள் இவ்ளோ நன்மை ஒளிஞ்சிருக்கா ?
பொதுவாக திராட்சை தண்ணீர் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் .இந்த திராட்சை தண்ணீர் தயாரிக்க என்ன செய்ய வேண்டும் என்றும் ,அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் இந்த பதிவில் நாம் காணலாம்
1.திராட்சைகள் காரத்தின் வளமான மூலமாகும், இது உங்கள் உடலில் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
2.மேலும் புரதச்சத்து நிறைந்த திராட்சை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
3.உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது என்றால் , திராட்சை தண்ணீரை தினமும் எடுத்துக்கொள்வது சிறந்தது.
4.உடம்பில் இரும்புச் சத்தானது குறைவாக இருந்தால், வெறும் வயிற்றில் திராட்சை நீரைப் பருகி, உங்கள் இரும்புச் சத்தை அதிகரித்துக்கொள்ளவும்.
5.வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிரம்பிய திராட்சை, ஆரோக்கியமான சருமம் மற்றும் பளபளப்பான கூந்தலை தருகிறது.
6.திராட்சையும் இன்சுலின் வினைத்திறனை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
7.திராட்சை தண்ணீர் தயாரிக்க 200 மில்லி தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
8.அடுத்து வெந்நீரில் 80-90 கிராம் உலர் திராட்சை சேர்த்து இரவு முழுவதும் ஊற விடவும்.
9.அடுத்து காலையில், திராட்சையை நீக்கி, மெதுவாக தண்ணீரை சூடாக்கவும்.
10.அடுத்து பின் காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் இதை குடிக்கவும்.

