சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

 
sarkkarai valli sarkkarai valli

பொதுவாக சர்க்கரை வள்ளி கிழங்கில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு சத்த்துக்கள் அடங்கியுள்ளது .அதனால் இந்த பதிவில்  சர்க்கரைவள்ளி கிழங்கு உண்பதால் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து நாம் காணலாம் .

1.சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு என்பது அறவே இல்லை. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிட ஆரோக்கியம் உண்டாகும் 
2.சிலர் அன்றாடம் காலை உணவை தவிர்ப்பர் .இப்படி தவிர்ப்பவர்களுக்கும், அதிகமான கார வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் வயிறு மற்றும் குடல் போன்றவற்றில் அல்சர் உருவாகி பாடாய் படுத்தும் . 
3.அப்போது சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகி ஆரோக்கியம் கிட்டும் .
4.மேலும் சர்க்கரைவள்ளி கிழங்குகளில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. 
5.சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.
6.சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. 7.இக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
8.மேலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. 
9.இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு உங்களின் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் புண்கள், நச்சுக்களை போக்கிவிடும் , 
10.மேலும் இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு உங்களுக்கு மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.