மலச்சிக்கல், பைல்ஸ் மற்றும் செரிமானம் பிரச்சனைகளில் நிவாரணம் அளிக்கிறது இக்கனி
பொதுவாக ஆயுர்வேதத்தில் ஆரோக்கிய பழங்கள் பட்டியலில் நெல்லிக்கனி ,திராட்சை மற்றும் அத்தி பழம் இடம் பிடித்துள்ளது .இனி இந்த ப்பதிவில் இந்த மூன்று பழங்களின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
1.நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் மருந்து அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
2.நெல்லிக்காய் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது,
3.நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது.
4.நெல்லிக்காயில் வைட்டமின் c இதில் அதிகம் உள்ளது.
5.நெல்லிக்காய் செரிமானத்தை மேம்படுத்தி , சளி மற்றும் காய்ச்சலிலும் நன்மை பயக்கும்.
6.அடுத்து ஆயுர்வேதத்தின் படி, மாதவிடாய் காலத்தில் அதிக இரத்த ஓட்டம் இருந்தால் திராட்சை அதற்கு நன்மை பயக்கும்.
7.சிலருக்கு அதிக வெப்பம் காரணமாக சில நேரங்களில் மூக்கிலிருந்து ரத்தம் வரும் .இப்படி வருபவருக்கு திராட்சை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
8.மேலும் ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளுக்கு திராட்சை சாப்பிடுவது ஆரோக்கியம் .
9.சிலருக்கு வயிற்றில் வாயு இருந்தால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அல்லது சாப்பிட்ட பிறகு எரியும் உணர்வு இருந்தால், ஆயுர்வேதத்தில் அதை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
10.இது தவிர, திராட்சை கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை நீக்கி அதிக தாகத்தைத் தீர்க்கவும் உதவுகிறது.
11.அடுத்து ஆயுர்வேதத்தில் அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
12.மலச்சிக்கல், பைல்ஸ் மற்றும் செரிமானம் தொடர்பான பிற பிரச்சனைகளில் நிவாரணம் அளிக்கிறது.


