கிவி பழம் நம் உடலுக்கு தரும் நன்மைகள்

 
kivi kivi

பொதுவாக இம்மியூனிட்டி பவரை அதிகரிக்க எலுமிச்சை ,ஆரஞ்சு ,மாதுளை ,சீத்தா பழமும் போன்ற பழங்கள் பேருதவி புரிகின்றன .கொரானா காலத்தில் இந்த பழங்களை உண்டு பலர் தங்களின் இம்மியூனிட்டி பவரை அதிகப்படுத்தி கொண்டனர் .மேலும் இம்மியூனிட்டி பவர் தரும் சில பழங்களை பார்க்கலாம் 

1.ஸ்ட்ராபெர்ரி பழத்தில் நிறைய இம்மியூனிட்டி பவர் உள்ளது .இதில்  வைட்டமின் சி மற்றும் கே, நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. 
2.ஸ்ட்ராபெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கவும், உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் செய்து நம்மை பாதுகாக்கின்றன  
3.அதே போல் அன்னாசிப்பழம் நிறய இம்முனிட்டி கொடுக்கும். வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் ப்ரோமைலின் ஆகியவை அடங்கியுள்ளன  
4.அன்னாசிப்பழத்தில் நம் உடலில் செரிமானம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் என்சைம்கள் உள்ளன. 
5.அதே போல கிவி பழத்திலும் நிறைய இம்மியூனிட்டி கிடைக்கும் .அந்த கிவியில் யில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது. 
6.இந்த கிவி பழம்  செரிமானத்திற்கு உதவுகிறது .
7.அது  மட்டுமல்லாமல் கிவி பழம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 
8.கிவிப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. 
9.கிவி பழம்  நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது..