கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது என்ன நோயை தடுக்கும் தெரியுமா ?
பொதுவாக நாம் அன்றாடம் சாப்பிடும் காய் கறிகளில் நிறைய ஆரோக்கியம் நிறைந்துள்ளது .அதனால் நம்மை உணவில் முக்கால் வாசி அளவிற்கு காய் கறிகளை சேர்த்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர் .அதனால் காய் களில் ஆரோக்கியம் தரும் கொத்தவரங்காயின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக ஆரோக்கியம் தரும் கொத்தவரங்காயில் உள்ள இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை பயக்கும்.
2.சிலருக்கு அல்சர் இருக்கும் . இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நம் உடலின் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். மேலும், இரத்த சோகை வராமல் தடுக்கும்.
3.மேலும் ஆரோக்கியம் தரும் கொத்தவரங்காயில் அதிகளவு நார்சத்து உள்ளது.
4.மேலும் அதிகமாக கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது இதில் உள்ள நார்ச்சத்து உம் உடம்பில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கும்.
5.மேலும், கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது இருதய பிரச்சினை வராமல் தடுக்கும்.
6.மேலும், கொத்தவரங்காய் நம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவி செய்யும்.
7.தினமும் உணவில் கொத்தவரங்காயை சேர்த்துக் கொண்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்து நம் உடம்பில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
8.நன்மை பயக்கும் கொத்தவரங்காயை நம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு வலுவை சேர்க்கும்.
9.மேலும், அதில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்து மூட்டு வலி வராமல் காக்கும் .


