மாதுளையின் விதைகள் எந்த நோய் வராமல் காக்கும் தெரியுமா ?
பொதுவாக நம் உடலில் கல்லீரல் இதயத்தை போலவே மிக முக்கியமான உறுப்பாகும் .இந்த கல்லீரலை பலர் கண்டதை குடித்து காக்க தவறி விடுகின்றனர் ,ஆனால் கண்டதை குடிக்காமல் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் கல்லீரலை நாம் காக்கலாம்
மேலும் மாதுளை ஜூஸ் உடலில் நீர்ச் சத்தை அதிகரிக்கிறது. நீர்ச்சத்து குறைபாடு கொண்டவர்கள் தொடர்ந்து இயற்கை பழவகைகளோடு மாதுளை ஜூஸ் குடித்து வரும் பொழுது உடலில் நீர்ச்சத்து மிக வேகமாக அதிகரிக்கும்.இந்த பதிவில் அது பற்றி பார்க்கலாம்
1.சிலருக்கு லிவரில் கொழுப்பு சேரும் .கல்லீரலில் சேரக்கூடிய கொழுப்பை குறைக்க உதவுகிறது மாதுளை ஜூஸ்.
2.பொதுவாக மாதுளையின் விதைகள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைத்து நம் ஆரோக்கியத்தை காக்கும் .
3.இந்த மாதுளை பழத்தின் காரணமாக கல்லீரலில் சேரக்கூடிய கொழுப்பை குறைக்க இது உதவுகிறது.
4.மாதுளை ஜூஸை தொடர்ந்து குடித்து வரும்பொழுது அது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது .
5.சிலருக்கு பிபி இருக்கும் .மாதுளை ஜூஸை தொடர்ந்து குடித்து வரும்போது ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
6.மேலும் ஒரு கப் மாதுளை ஜூஸ் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும்.
7.சிலருக்கு ஸ்கின் பிரச்சினை இருக்கும் மாதுளை ஜூஸை தொடர்ந்து தினமும் குடித்து வந்தால் சருமத்தை இது அழகாக ஆரோக்கியமாக மாற்றும்.
8.சிலருக்கு அல்சர் இருக்கும் மாதுளை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் புண் ஆறும்.
9. வயிற்றுப் புண் இருப்பவர்கள் தொடர்ந்து காலையில் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் அந்த நோய் குணமாகும்


