இந்த பழ விதைகளில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக கோடை காலத்திற்கென்று சில பழங்கள் உள்ளன .அந்த பழங்களை தொடர்ந்து கோடையில் உண்டு வந்தால் கோடையின் வெயிலிலிருந்து தப்பிக்கலாம் .முலாம்பழம் ,சாத்துக்குடி ,ஆரஞ்சு ,மாதுளை போன்ற பழங்கள் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் பழங்கள் .அந்த வகையில் முலாம் பழ விதைகளை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை பார்க்கலாம்
1.விலை மலிவான முலாம்பழ விதைகளில் நிறைய பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.
2.மேலும் முலாம்பழ விதைகளில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
3.கோடையில் வழக்கமான செயல்படுகளை செய்ய, உடலுக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது.
4.அதனால் இந்த விதைகளில் வைட்டமின்-சி போதுமான அளவில் உள்ளது.
5.எனவே இந்த விதைகளை உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
6.மேலும் இந்த முலாம்பழம் விதைகள் இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
7. முலாம்பழம் விதைகளில் நம் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் சத்துக்கள் உள்ளது .
8. மேலும் இந்த முலாம் பழ விதைகளை கண்புரை அபாயத்தைக் குறைக்கிறது. இதை உட்கொண்டால் , கண்களின் ஒளியும் அதிகரிக்கிறது.
9.சிலர் நகங்கள் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்புவர் .அப்படி விரும்பினால், நீங்கள் முலாம்பழம் விதைகளை உட்கொள்ளத் தொடங்கலாம்.


