நாட்டு சர்க்கரை எந்த நோயையெல்லாம் தடுக்கும் தெரியுமா ?
பொதுவாக வெள்ளை சர்க்கரையால் நம் உடலுக்கு பல்வேறு கேடுகள் உண்டாகும் .அதனால் நம் எலும்புகள் தேய்மானம் அடையும் .அதனால் இதற்கு பதில் நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்
நாட்டு சர்க்கரை இயற்கை நிறம் மற்றும் மணத்துடன் கிடைப்பதால் அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றன.
1.பொதுவாக நாட்டுச்சக்கரையில் வைட்டமின் பி6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் ஏராளமாய் நிறைந்துள்ளன.
2.இந்த நாட்டு சர்க்கரை சரும செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும்.
3.நாட்டு சர்க்கரையால் சருமத்தை ஸ்க்ரப் செய்வதன்மூலம், சரும துளைகளில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்
4.மேலும் நாட்டு சர்க்கரை அழுக்கு மற்றும் தூசுக்களை அகற்றி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும்.
5.நாட்டுச்சக்கரையில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க இது பெரிதளவில் உதவுகிறது.
6.மேலும், நாட்டு சர்க்கரையில் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதால், எடையை குறைக்க உதவுகிறது.
7.நாட்டு சர்க்கரையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை குணமாக்கும்
8.மேலும் நாட்டு சர்க்கரை மாத விடாய் வலிகளைப் போக்க பயன்படுகிறது.
9.மேலும் நாட்டு சர்க்கரை வயிற்றுப் பிடிப்புகளைப் போக்கவும், வலியைக் குறைக்கவும், பயன்படுகிறது.


