என்னது கழுதை பாலில் இவ்ளோ இம்மியூனிட்டி பவரா ?
ஒருவரை நாம் கேவலமாக திட்டுவதற்கு பயன்படும் கழுதை நமக்கு பல வகையில் உபயோகமாக உள்ளது .இந்த கழுதைப் பாலில் பசுவின் பாலை விட வைட்டமின் சி பல மடங்கு அதிகமாக உள்ளது. மற்றும் கேசின், லாக்டோஸ், வைட்டமின்கள் A B1, B2, B6,E மேலும் D போன்ற இந்தக் கொழுப்பு அமிலங்கள் தோல் சுருக்கங்கள் தோற்றத்தை குறைத்து சேதமடைந்த சருமத்தை மீண்டும் உருவாக்க உதவுகிறது. மேலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காயத்தை குணப்படுத்துவதற்கு பயனுள்ளதாக உள்ளது இந்த கழுதை பால் என்கின்றனர் அதனை யூஸ் பண்ணியவர்கள்
மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
இந்த கழுதை பாலில் வைட்டமின்கள் A B1, B2, B6,E , ஒமேகா 3,6, கேசின், லாக்டோஸ், பாஸ்போலிபிட்கள், போன்ற சத்துக்கள் இதில் உள்ளன. இந்த பாலில் உள்ள மருத்துவ நன்மைகளை நன்கு அறிந்த பழங்கால மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் இதை மருத்துவத்திற்கு பயன்படுத்தினார்கள். இன்றும் கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு அடிக்கடி கழுதைப்பால் கொடுக்கும் பழக்கம் உள்ளது. மேலும் ஆஸ்துமா, சளி, இரும்பல், மஞ்சள்காமாலை, கீல்வாதம், ஆகியவற்றை கழுதைப்பால் மூலம் குணப்படுத்த முடியும் என்று இந்திய சித்த மருத்துவம் அடித்து கூறுவதால் அதற்கு இன்றும் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது
லைசோசைம், லாக்டோஃபெரின் மற்றும் பூவின் சீரம் அல்புமின் போன்ற மோர் புரதங்கள் மனித உடலுக்கு பயனுள்ள கட்டி எதிர்ப்பு நடவடிக்கைகளை கொண்டுள்ளது என்று பல கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. கழுதை பாலின் மோர் புரதங்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றலை ஆற்றலை கொண்டுள்ளது.எனவே இவ்ளோ சக்தி வாய்ந்த பாலை நமக்கு கொடுக்கும் கழுதையை இனியாவது திட்டுவதற்கு பயன்படுத்தாமல் இருப்போம்