பேக்கரி உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் பொழுது என்னாகும் தெரியுமா ?

 
kudal kudal

பொதுவாக சித்த மருந்துகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்வது நல்லது .ஆனால் அதே நேரத்தில் வெறும் வயிற்றில் சில உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்தல் நம் ஆரோக்கியத்துக்கு நல்லது .அந்த வகையில் வெறும் வயிற்றில் எந்த உணவுகளை தவிர்ப்பது நலம் சேர்க்கும் என்று இந்த பதிவில் பாக்கலாம் 

1. சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, கிவி, எலுமிச்சை, கொய்யா போன்ற  நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை காலையில் சாப்பிடுவது ஆபத்து  
2.இந்த சிட்ரஸ் பழங்களில்  இருக்கக்கூடிய அதிக பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளடக்கம் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். 
3.அந்த சிட்ரஸ் பழங்கள்  காலையிலிருந்து உங்களுடைய வயிற்றில் ஒருவித மந்த நிலையை ஏற்படுத்தி விடும் .மேலும்  நாள்முழுவதும் உங்களை மகிழ்ச்சி அற்றதாக மாற்றும்.
4.அது மட்டுமல்லாமல் காலையில் வெறும் வயிற்றில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
5. காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ,இது  செரிமானத்தை கடினமாக்குகிறது.
6.. மேலும் இந்த காய் கறிகள்  வாயுத் தொல்லை அதிகரிது , வயிற்று வலியை ஏற்படுத்தும். மேலும் காலையில் வெறும் வயிற்றில் சாலட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
7.மேலும் பேக்கரி பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 
8.கேக், பீட்சா போன்ற பேக்கரி பொருள்கள் பலருக்கும் பிடித்த காலை உணவில்  , ஈஸ்ட் காணப்படுகிறது. 
9.இந்த பேக்கரி உணவுகளை  வெறும் வயிற்றில் நீங்கள் உட்கொள்ளும் பொழுது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.   
10.காலையில் எழுந்தவுடன் எந்தவிதமான பேக்கரி பொருட்களையும், இனிப்பு பொருள்களையும் சாப்பிடுவது வாயு தொல்லையினை உண்டாக்கும்