பேக்கரி வகை உணவுகளை எந்த நோயாளி தவிர்க்கணும் தெரியுமா ?
பொதுவாக தைராய்டு வந்து விட்டால் சில வகை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் ,இந்த உணவுகள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.குறிப்பாக முட்டை கோஸ் ,பால் பொருட்கள் ,பேக்கரி உணவுகள் ,மற்றும் மதுவை அவசியம் தவிர்க்க வேண்டும் .
2.அவர்கள் செலினியம் அதிகம் உள்ள பூண்டு ,காளான் ,ஆப்பிள் போன்ற உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளலாம் ,மேலும் அவர்கள் அவசியம் ஒதுக்க வேண்டிய மேலும் சில உணவு பட்டியலை பார்க்கலாம்
3. தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்கணும் .
4. பாஸ்ட் ஃபுட்டில் அதிக அளவு உப்பு பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது போதுமான அளவு அயோடின் சத்துக்கள் கொண்டதாக இருக்காது என்பதால் அவற்றை தவிர்க்க கூறுகிறோம் .
5.தைராய்டு உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒதுக்கணும் .இது உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணம் .
6.பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளை ஒதுக்கணும் .இது செரிமானம் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும்.