இதயம் சார்ந்த நோய் பாதிப்பு எப்போது எப்படி சாப்பிட்டால் தாக்கும் தெரியுமா ?
பொதுவாக இரவு பணியில் வேலைக்கு செல்வோர் அதிகாலை 3 மணிக்கெல்லாம் கூட பிரியாணியும் சிக்கனும் சாப்பிட்டு தங்களின் உடலை கெடுத்து கொள்கின்றனர் .இப்படி இரவு உணவை லேட்டாக சாப்பிடுவோருக்கு பல உடல் உபாதைகளை சந்தித்து தங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கின்றனர்
இரவு உணவை எப்படி சாப்பிடணும் என்று இப்பதிவில் காணலாம் .
1.பொதுவாக இரவு உணவை சாப்பிட்டு 3 மணிநேரமா கழித்துதான் உறங்க செல்ல வேண்டும் ,அதனால் இரவு 9 மணிக்குள்ளாக இரவு உணவை சாப்பிட வேண்டும் .
2.லேட்டாக உணவை சாப்பிட்டு உடனே தூங்க செல்வோரில் சிலருக்கு கேன்சர் அறிகுறிகள் தென்பட்டதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
3.சிலர் இரவு லேட்டாக சாப்பிடுவர் ,அப்டி தாமதமாக சாப்பிட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
4.இரவில் தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லும்போது அது தூக்க சுழற்சிக்கும் இடையூறு விளைவிக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர் .
5.இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது கூடுதல் கலோரிகள் எடுத்து கொள்ளும். இதனால் இது செரிமானம் ஆகுவதற்கு நேரமில்லாமல் போய்விடும் வாய்ப்புள்ளது
6.இரவு சாப்பாட்டின் அளவு அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது
7.நீரிழிவு, தைராய்டு, இதயம் சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் இரவு உணவை குறைவாக சீக்கிரம் சாப்பிட்டால் உடல் நலம் சிறப்பாக இருக்கும்