நரம்புகள் வலுவிழந்து காணப்படுபவர்கள் எந்த பழம் சாப்பிடணும் தெரியுமா ?
பொதுவாக பலருக்கும் சாப்பிட்டு முடித்தவுடன் ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும் அப்படிபட்டவர்கள் உணவு உண்ட பிறகு கண்ட இனிப்புகளை சாப்பிடாமல் அதற்கு சீத்தா பழம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெருகும் .மேலும் இந்த சீத்தா பழத்தின் மூலம் நாம் பெரும் நன்மைகளை பார்க்கலாம்
1.ஒரு சீதா பழத்தை சாப்பிடுவோருக்கு , தேவையான இனிப்பு சுவையும் கிடைக்கும். இந்த பழத்தில் நார்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரையின் அளவும் கூடாது.
2.பொதுவாக இதயத்தின் நண்பன் என சீதா பழத்தை சொல்வார்கள்.
3.இந்த சீத்தா பழமானது இதய வால்வுகளில் உள்ள கொழுப்புகளை கரைத்து, இதய நோய் ,இரத்த அழுத்தம் போன்றவை உங்கள் உடலில் வராமல் தடுக்கிறது.
4.இந்த சீத்தா பழத்தின் மூலம் ,நரம்புகள் வலுவிழந்து காணப்படுபவர்கள் சீத்தாப்பழத்தை சாறு எடுத்து அதனுடன் திராட்சை பழ சாற்றை கலந்து பருகி வர நரம்புகள் வலுப்பெறும்
5. அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுபவர்கள் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர தசைகள் சீராக இயங்கி தசைப்பிடிப்பு மாறும் .
6.உடல் ஆரோக்கியத்துக்கு சீத்தாப்பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட சொல்வார்கள்.
7. சீத்தாப்பழம் நம்முடைய உடலுக்கு அதிக குளிர்ச்சியை தருவதால் இரவு நேரங்களை இந்த பழத்தை சாப்பிடும் பொழுது வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட வேண்டும்
8.இப்படி வெந்நீரில் ஊறவைச்சி சாப்பிட்டால் அதன் குளிர்ச்சி உடலை அவ்வளவாக பாதிக்காது


