எந்த ஜென்மத்திலும் இதய நோய் வராமல் காக்கும் இந்த பழம்

 
heart

பொதுவாக பழ வகைகளில் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு மருத்துவ குணமுண்டு .அந்த வகையில் ஆரோக்கியம் தரும் சீத்தா பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த சீத்தா பழத்தை எப்படி சாப்பிட்டால் என்ன நன்மை உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக மன அழுத்தத்தை சரி செய்யும் பழம் என சீதா பழத்தை சொல்வார்கள்.

2.இரவில் சீத்தா பழம்  சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

3. அதுமட்டுமில்லை அதோடு சீத்தா பழத்தில் உள்ள  தாது உப்புக்கள் நமது உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் தசைகளுக்கும் இதயத்திற்கும் நல்ல வலுவை கொடுக்க கூடியவை.

4. உணவு உண்ட பிறகு ஒரு சீதா பழத்தை சாப்பிட, தேவையான இனிப்பு சுவையும் கிடைக்கும். சீதா பழத்தில்  நார்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரையின் அளவும் கூடாது.

5.இதயத்தின் நண்பன் என சீதா பழத்தை சொல்வார்கள்.

6.சீதா பழம் இதய வால்வுகளில் உள்ள கொழுப்புகளை கரைத்து இதய நோய் இரத்த அழுத்தம் போன்றவை உங்கள் உடலில் வராமல் தடுக்கிறது.

7.நரம்புகள் வலுவிழந்து காணப்படுபவர்கள் சீத்தாப்பழத்தை சாறு எடுத்து அதனுடன் திராட்சை பழ சாற்றை கலந்து பருகி வர நரம்புகள் வலுப்பெறும்

8. அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுபவர்கள் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர தசைகள் சீராக இயங்கி தசைப்பிடிப்பு மாறும் .

9.சீத்தாப்பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் பிறகு சாப்பிட்டால் அதன் குளிர்ச்சி உடலை அவ்வளவாக பாதிக்காது