சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவும் இந்த பழம்

 
kidney

பொதுவாக நம் உடல் நலத்திற்கு திராட்சை பழம் மிகவும் நல்லது செய்யும் .உதாரணமாக

சர்க்கரை நோய்க்கு திராட்சை மிகவும் நல்லது. தினசரி காலையில் ஒரு கைப்பிடி அளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.மேலும் இது போன்ற திராட்சை பழம் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்

sugar

1.பொதுவாக மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினசரி சிறிதளவு திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர வேண்டும். நாம் தினசரி சாப்பிடுகின்ற உணவு வகைகளில் மற்றும் சமையலுக்கு பயன் படுத்துகின்ற எண்ணெய்களில் கொழுப்பு சத்து அதிக அளவில் உள்ளது.

2.மேலும் திராட்சை பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு அதிக அளவில் சேராமல் பாதுகாக்கிறது.

3.பொட்டாசியம் சத்து திராட்சையில்  அதிக அளவில் உள்ளது. எனவே இந்த பொட்டாசியம் உடலில் ஓடுகின்ற ரத்த அழுத்தத்தினை சீராக்குகிறது. மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

4.வயது முதிர்ந்து விட்டால் கண் பார்வை சிறிது சிறிதாக மங்கத் தொடங்கும். எனவே அவர்கள் சத்து நிறைந்த திராட்சை போன்ற உணவுகளை உண்பது மிகவும் அவசியமாகும்.

5.திராட்சைப்பழம் கண்களின் கரு விழிகளில் உள்ள செல்கள் வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே கண் பார்வை தெளிவாகும்.

6.மேலும் இந்த திராட்சை  கண் அழுத்தம் சம்பந்தமான நோய்கள் கண்களில் புரை ஏற்படுவது போன்றவற்றை போக்குகிறது.

7.திராட்சைப்பழம் மன அழுத்தத்தில் உண்டாகும் கெட்ட ரசாயனத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே இது உடல் மற்றும் மனதிற்கு சிறந்த மருந்தாக உள்ளது.

8.தொற்று நோயினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்காமல் இருக்க திராட்சைப் பழம்  உதவும் . எனவே தினம்தோறும் திராட்சை பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

9.திராட்சைபழத்தினை அப்படியே சாப்பிடுவதாலும் மற்றும் இதனை நன்கு காயவைத்து உலர்திராட்சையாக சாப்பிடுவதாலும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.

10.சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் நலத்துடன் இருக்க முடியும். எனவே சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் எளிதில் வராது. சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமழும் தடுக்கும்.