குறட்டை விடுவதால் எவ்வளவு பாதிப்பு தெரியுமா ?

 
sleep

பொதுவாக குறட்டை உடல் பருமன் உள்ளோருக்கு இந்த பழக்கம் உள்ளது .வயது அதிகமாக அதிகமாக இந்த பழக்கம் பலருக்கு வந்து விடுகிறது .இதனால் உண்டாகும் பாதிப்பு பற்றி பார்க்கலாம்
1.அழுத்தம், மாரடைப்பு, தூக்கமின்மை, தலை வலி, பக்கவாதம், மறதி, சர்க்கரை நோய் போன்ற. நோய்களும் குறட்டை விட்டு தூங்குவோருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது ,

Sleeping
2..இந்த குறட்டை பிரச்சினைக்கு சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை, கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் ஆகும்
3..மேலும் புகை பிடிப்போர் , மது குடிப்போர் , அளவுக்கு அதிகமாகத் தூக்கமாத்திரை சாப்பிடுவோர் போன்ற பழக்கங்கள் உள்ளோருக்கும்  குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது
4.மேலும் உடல் எடை குறையும் போது குறட்டை விடும் பழக்கம் நாளடைவில் குறைந்து அருகில் தூங்குவோருக்கு நிம்மதி பிறக்கிறது .
5.துரதிர்ஷ்டவசமாக குறட்டை விடுபவர்கள்  உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் மிகவும் சிரமம் என்று பல ஆய்வுகள் கூறுகிறது
6.ஆனால் உடல் எடை குறையும் போது  கழுத்தில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து விடும் போது  குறட்டை குறைந்து நல்ல தூக்கம் பிறக்கிறது .