ஆரஞ்சு பழத்துடன் பாலை சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது என்னாகும் தெரியுமா ?
பொதுவாக பழங்களின் முழு பலனும் நம் உடலுக்கு கிடைக்க அந்த பழங்களுடன் சில பொருட்களை சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும் .,இந்த பதிவில் எந்த பழத்துடன் ,அல்லது எந்த காய்கறிகளுடன் இவற்றை சேர்த்து உண்டால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.கிட்னியில் பாதிப்பு வராமல் தடுக்க ,கேரட் ஜூஸில் எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறு கலந்து குடிக்க கூடாது.
2.உடலில் ரத்த சோகை வராமல் தடுக்க பப்பாளி பழத்துடன் எலுமிச்சை சாறை சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது.
3. உடலில் அமிலத்தன்மையும் வாயுத்தொல்லையும் வராமல் தடுக்க வாழைப்பழத்துடன் கொய்யாப் பழத்தை சேர்க்கக் கூடாது.
4.உடலில் வயிற்றுப் போக்கு, தலைவலி, வயிற்று வலி ஆகிய தொல்லைகள் வராமல் தடுக்க பழங்கள் சாப்பிடும்போது அவற்றுடன் சேர்த்து காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது. .
5.ஆரஞ்சு பழத்துடன் பாலை சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது அது செரிமானக் கோளாறை ஏற்படுத்தும். எனவே இவற்றை தவிர்த்துவிடுங்கள்.
6.வயிற்று வலி, வாயுத்தொல்லை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற தொல்லைகளை தடுக்க எப்போதும் அன்னாசி பழம் சாப்பிடும்போது அதோடு பால் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது.