காலை உணவை சாப்பிடாமல் இருப்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பாதிப்புகள்
பொதுவாக பலர் அலுவல் காரணமாக தங்களுக்கு நேரமில்லை என்று கூறி காலை உணவை தவிர்த்து விடுகின்றனர் .இப்படி காலை உணவை தவிர்ப்பதால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலர் வேலையின் காரணமாக காலை உணவை தவிர்ப்பர் .இப்படி காலை உணவை சாப்பிடாமல் இருப்பதால் , குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்படும் .இதனால் சர்க்கரை நோய் சட்டெனெ பற்றி கொள்ளும் .
2.காலை உணவை உணவைச் சாப்பிடாவிட்டால், கிருமிநாசினியின் ஆதரவின்றி, வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் உண்டாகும் .
3.சிலர் முந்தைய நாள் இரவு முதல், அடுத்த நாள் மதியம் வரை தொடந்து 20 மணி நேரம் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் நடக்கும் அனைத்து வளர்சிதை மாற்றங்களிலும் கோளாறு ஏற்படும்.
4.மேலும் காலையில் சாப்பிடாமல் தவிர்க்கும்போது,அன்றைய தினம் செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி உடலுக்கு கிடைக்காது.
5.மேலும் காலையில் சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்படும் .
6.மேலும் , மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி மற்றும் மூளை செயல்பாடு பாதிக்கும். .
7.சிலர் உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பர் .ஆனால் அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இதனால் எடை கூடும் .
.