உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுவோருக்கு ஒரு உபயோகமான பானம்

 
fat

பொதுவாக உடற் பருமனுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வைத்தியம் செய்கின்றனர் .
நாம் உடல் எடையை குறைப்பதற்கான ஆரோக்கிய பானத்தை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
1.இந்த பானத்தின் பெயர் இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், கருப்பு மிளகு கலந்த பானம்
2.இந்த உடல் எடை குறைக்கும் பானத்தை தயாரிக்க உங்களுக்கு 1 லிட்டர் தண்ணீர், 3 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 2 இன்ச் இலவங்கப்பட்டை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கருப்பு மிளகு மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு தேவைப்படும்.

Belly Fat
3.முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும் , பின்னர் அதில் நீரை கொஞ்சமாக ஊற்றவும்.
4.பிறகு அந்த தண்ணீரில்  பெருஞ்சீரகம், கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து 5- நிமிடம் வரை இதை கொதிக்க விடுங்கள்.
5.அந்த தண்ணீர் வெதுவெதுப்பானதும் இதை வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தினம் குடிக்க எடை குறைப்பில் நல்ல மாற்றம் உண்டு .
6.இந்த பானத்தில் உள்ள இலவங்கப்பட்டையில் அதிக ஆன்ட்டி-ஆக்சிடென்ட் உள்ளதால் நம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி புரியும் .
7.மேலும் இந்த ஆரோக்கிய பானம்  சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும்.