பப்பாளி விதை பொடியை பாலில் கலந்து குடிக்க எந்த நோய் ஓடும் தெரியுமா ?
பொதுவாக சிலருக்கு வயிற்றில் புழுக்கள் இருப்பதால் அவர்களுக்கு சரியாக சாப்பிட முடியாது .அப்படியே சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் குழந்தைகள் மந்தமாக இருப்பர் .இதனால அவர்கள் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் .இதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.வாரத்திற்கு ஒருமுறை பாகற்காயை உட்கொண்டு வந்தால், குடல் புழுக்கள் அழியும்
2.குடல் புழுக்களை அழிக்க சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

3. உங்கள் உடலில் உள்ள புழுக்களை அழிக்க அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள் போதும்.
4.ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை வெதுவெதுப்பான பாலில் சேர்த்து குடிக்க குடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.
5.சில பல் பூண்டை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால், குடலில் உள்ள புழுக்கள் முழுவதுமாக அழிந்துவிடும்.
6.நல்ல கொளுந்து வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, வெறும் வயிற்றில் உட்கொள்ள குடல் புழுக்கள் முழுவதுமாக அழிந்துவிடும்.
7.பப்பாளியில் உள்ள விதைகளின் பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்க வயிற்றுப்புழுக்கள் அழிக்கப்படும்.
8.ஒரு டேபிள் ஸ்பூன் ஓம விதைகளை நன்கு கொதிக்க வைத்து நாள் முழுவதும் குடிக்க ,குடல் புழுக்கள் அழிவதோடு, செரிமானமும் சிறப்பாக இருக்கும்.


