ஆஸ்த்மா தொல்லையை தீர்த்து வைக்கும் இந்த இலை
பொதுவாக கற்பூர வள்ளி இலைகள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சாப்பிட்டு வந்தால் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு .மேலும் இதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.உடலில் கபம் சேராமல் ஆரோக்யமாயிருக்க 5 கற்பூரவள்ளி இலைகள், 5 - மிளகு, 1 வெற்றிலை கொதிக்க வைத்து அந்த நீரை 60 மில்லி லிட்டர் காலை, மாலை - பருகலாம்.
2.சில குழந்தைகளுக்கு சளி பாடாய் படுத்தும் .அந்த குழந்தைகளுக்கு 20-&30 மில்லி லிட்டர் வரை அருந்தி வர நுரையீரல் சளி, ஆஸ்துமா, காசநோய், நாள்பட்ட சளி குணமாகும்.
3.சிலருக்கு அதிகமாய் புகை பிடித்ததால் நுரையீரல் கெட்டு போயிருக்கும் .அவர்கள் கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்டக்காய்ச்சி அதில் பாதியளவை நன்கு வடிகட்டி அருந்தி வந்தால் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் நீங்குவதோடல்லாமல் .
சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது.
4. சிலருக்கு தொன்டை புண்ணிருக்கும் ,அந்த பெரியவர்களில் நாசி நெரிசல் மற்றும் தொண்டை புண் குறைக்க கற்ப்பூர வள்ளி பயன்படுகிறது.
5.சிலருக்கு ஆஸ்த்மா தொல்லை கொடுக்கும் .அந்த ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது.
6. சிலருக்கு செரிமான பிரச்சினையிருக்கும் வயிற்றின் செரிமானத்திற்கு உதவுகிறது.
7. சில உணவுகளின் சுவை கூட்ட கற்பூர வள்ளி பயன்படுத்தப்படுகிறது.