விளக்கெண்ணெயை ஒரு துணியில் விட்டு அடி வயிற்றில் கட்டி கொள்வது எந்த நோயை குணமாக்கும் தெரியுமா ?

 
oil

பொதுவாக குடல் வால் என்பது  முற்றி வந்ததும் வெடித்து விடும் அபாயம் உள்ளது .இது கட்டி போன்ற நோய்களால் உண்டாகிறது .இதற்கு ஆங்கில மருத்து வத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடுவது உண்டு .இதை இயற்கையாக எவ்வாறு குணப்படுத்தலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1. இயற்கை மருத்துவத்தில் சில சிகிச்சை முறைகள் உள்ளன ,அதில் விளக்கெண்ணெயை ஒரு துணியில் விட்டு அடி வயிற்றில் கட்டி கொளவ்து ,
2.மற்றொன்று பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவது போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன ,இது பற்றி மேலும் பார்க்கலாம்

3.அடிவயிற்றின் வலது பக்கத்தில், இடுப்பு எலும்புக்கு மேலே, சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில், சிறிய விரல் அளவு இருக்கும் ஓர் உறுப்பு இருக்கும் அதுதான் குடல்வால் என்ற அப்பென்டிக்ஸ்

kudal
4.இதில் ஏற்படும் நோய் தொற்று, தேவையில்லாத கட்டி அல்லது கல் ஆகியவற்றுக்கு அப்பென்டிசைட்டிஸ் என்று மருத்துவ உலகில் பெயர் வைத்துள்ளனர்
5.இதன் அறிகுறிகளாக வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலச்சிக்கல், பசியின்மை, தொப்புளை சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்கத்தின் அடிப்பாகத்தில் கடுமையான வலி போன்றவை ஏற்பட்டு வலி பின்னியெடுக்கும் .
6.மேலும் அந்த பகுதியை அழுத்தும்போதோ, ஆழமாக சுவாசிக்கும்போதோ, அசையும்போதோ வலி அதிகரித்து நம்மை படுத்தி எடுக்கும்  
7.இருமல் அல்லது தும்மல் வரும்போது வயிற்றில் வலி ஏற்படும். கடுமையான வயிற்று வலியுடன் அடிக்கடி வயிற்றுப்பிடிப்பும் ஏற்பட்டு நம்மை துன்பத்தில் தள்ளும் .
8.இதற்கு தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் மருத்துவம் நோயின் கடுமை அதிகமாகி குடல் வால் வெடித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது பல டாக்டர்களின் வாக்கு மூலம் .