முதுகு வலி முதல் மூட்டு வலி வரை சரி செய்யும் உணவுகள் ​​​​​​​

 
moottu pain tips from aththi milk

பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பல பாகங்களில் வலி ஏற்படுகிறது .இந்த உடல் வலிக்கு பல காரணம் உள்ளது .

மேலும் உடலில் ஏற்படும் சத்துக்குறைபாடு காரணமாக உடலின் சில பகுதிகளில் வலி ஏற்பட்டு நம்மை வேதனையில் தள்ளுகிறது

மேலும் உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது .இந்த உடல் வலி உண்டாகாமல் இருக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக நம் உடலில் உள்ள எலும்பு மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கால்சியம் சத்து முக்கிய பங்குவகிக்கிறது.

body pain tips

2.இந்த கால்சியம் சத்து குறைபாடு ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகளவில் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகிறது

3.இது மட்டுமல்லாமல்  பெண்களுக்கு முதுகு மற்றும் மூட்டு வலி அதிகளவில் ஏற்படுவதால் பெண்கள் கட்டாயம் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் ,

4.அது மட்டுமல்லாமல் நாம் உணவில் சேர்த்து கொள்ளும் தயிரில் அதிகளவு கால்சியம் உள்ளதால் தினசரி உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

5.இந்த தயிரை  தொடர்ந்து உட்கொள்வதால் எலும்புகள் வலுவடையும், மேலும் தயிர் சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியமடைந்து பல நோய்கள் அண்டாமல் பாதுகாக்கும்

6.தயிரில் போதுமான புரதம், கால்சியம், ரிபோஃப்ளேவின், சத்துக்கள் உள்ளது

7.இது மட்டுமல்லாமல் தயிரில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் உள்ளதால் ,இது முதுகு வலியில் இருந்து நம்மை காக்கும்

8.மேலும் நம் உடலின் கால்சியம் சத்தை அதிகரிப்பதற்கு சோயா பால் சிறந்தது.இந்த சோயா பாலில் கால்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை குடிக்கலாம் .

9.மேலும் உங்கள் ஹீமோகுளோபின் அளவையும் சோயா பால் அதிகரிக்கும்.

10.மேலும் பச்சை காய்கறிகள் நம் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும்