இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டா எந்த நோய்க்காக மாத்திரை சாப்பிட வேணாம் தெரியுமா?

 
Ginger

பொதுவாக ரத்த அழுத்த நோய் வந்து விட்டால் அது நம்மை படுத்தி எடுத்து விடும் .அந்த நோயை கட்டுப்படுத்த சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம்.
1 : இஞ்சியை மசித்து அதில் இருந்து சாறு எடுத்துக்கொண்டு அதோடு சிறிது தேன் கலந்து காலை மாலை என இரு வேலையும் குடித்தால் ரத்த கொதிப்பு குணமாகும்

bp
 2 : தினமும் மதிய உணவில் அகத்தி கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு கட்டுக்குள் வரும்.
 3 : சீரகம், கல்யாண முருங்கைக் கீரை ஆகிய இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து நன்கு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.
4 : முருங்கை கீரையில் இருந்து சாறு பிழிந்து அதில் சீரகத்தை ஊறவைத்து விடவும்
5.பின் அதை உலர்த்தி அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் அந்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதை தேனில் நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.