அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

 
carot

பொதுவாக கேரட் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடியது .உதாரணமாக

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாற்றுடன் எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட பித்த கோளாறுகள் சரியாகும்.இது போல் கேரட் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்

1.சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும் .இப்படி உள்ளவர்கள் வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள்.

2.கேரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். சிலரின் பற்களில் கரை இருக்கும் .இப்படி உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும்.

3.கேரட்டை சமைத்து உண்பதைவிட பச்சையாக சாப்பிடுவதின் மூலம் அதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நமக்கு கிடைக்கும்.

4.கேரட்டில்  வைட்டமின்செறிந்துள்ள காரணத்தால், ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது

5.சிலருக்கு கண் கோளாறு இருக்கும் .கேரட்டை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.

Digital Eye Strain

6.ஆரோக்கியம்  தரும் கேரட்டில்  அடங்கியுள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது.

7.சிலருக்கு வைட்டமின் சத்து குறைபாட்டினால்  மாலைக்கண் உண்டாகும் .இந்த நோயை குணமாகும் கேரட்.

8.சிலருக்கு வைட்டமின் சத்து குறைபாட்டினால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. இதிலிருந்து சருமத்தை பாதுகாத்து, நமக்கு பொலிவான தோற்றத்தை தரும் ஆற்றல் கொண்டது கேரட் .

9.சிலரின் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு இருக்கும் .இந்த கொழுப்புகளை தினமும் காரட் சாப்பிடுவதன் மூலம் சற்று குறைக்க இயலும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தியும் செய்கின்றது.

10.சிலருக்கு அல்சர் இருக்கும் .கேரட் சாப்பிடுவது குடல் புண்கள் உண்டாகாமல் தடுக்கின்றது.